நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்ற கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு – 07.08.2016
August 7, 2016
nallur
நல்லூர் கந்தசுவாமி கோவில் 01ம் திருவிழா – 08.08.2016
August 8, 2016

நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் – 08.08.2016

nallur

 

DSC_0176


 

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கொடியேற்றம் காண காலை முதல் பக்தர்கள் ஆலயத்தின் உட்புற மண்டபத்தில் கூடத் தொடங்கினார்கள். அந்தணர்களின் வேதமந்திர பாராயணம் ஒலிக்க அடியார்களின் அரோகரா கோஷம் முழங்க இன்று காலை 10 மணிக்குக் கொடியேற்றம் இடம்பெற்றது.
யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வெளிநாடுகளிலிருந்து விடுமுறையில் திரும்பியுள்ள புலம்பெயர் உறவுகளும் கந்தனைத் தரிசிக்க திரண்டு வந்திருந்தனர்.
ஆலய சுற்றாடலில் பாதுகாப்புக் கடமையில் சீருடையிலும் சிவில் உடையிலும் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர். நூற்றுக்கணக்கான அடியார்கள் வயது வேறுபாடுகள் இன்றி அங்கப்பிரதட்ணம் செய்தார்கள்.
இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் உற்சவம் தொடர்ந்து 25 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.31.08.2016 திகதி காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும் மறுநாள் காலை 7 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

DSC_0174 DSC_0171 DSC_0169 DSC_0167 DSC_0165 DSC_0163 DSC_0159 DSC_0145 DSC_0139 DSC_0137 DSC_0136 DSC_0131 DSC_0127 DSC_0125 DSC_0121 DSC_0118 DSC_0117 DSC_0116 DSC_0115 DSC_0113 DSC_0111 DSC_0107 DSC_0102 DSC_0098 DSC_0097 DSC_0089 DSC_0087 DSC_0085 DSC_0081